இலங்கையுடன் நெருக்கமாகும் ஐரோப்பா – இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பிரான்ஸ் நடவடிக்கை!

இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள இலங்கைக்கு உதவ இருப்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இலங்கைக்கு விஜயம் செய்ய அதிகளவிலான பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் தயாராக உள்ளனர்.
அதேநேரம் சமுத்திரவியல் தொழில்நுட்பம், சேதனப் பசளை உற்பத்தி என்பனவற்றிலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க பிரான்ஸ் எதிர்பார்த்து உள்ளது.
அத்துடன் இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த போலாந்து அரசாங்கம் எதிர்பார்த்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது நாட்டின் முதலீட்டாளர்களுக்கு இலங்கை உயர்ந்த பட்ச வாய்ப்புகளை வழங்கும் என்று போலாந்து அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
தற்போதைய நிலை சீரடைந்ததும் இலங்கைக்கு கூடுதலான போலாந்து சுற்றுலாப்பயணிகள் வருகை தரவும் எதிர்பார்த்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|