இலங்கையுடன் இணைந்து பணியாற்ற தயர் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!
Tuesday, April 19th, 2022சர்வதேச நாணய நிதியத்துடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம், இலங்கையுடன் இணைந்து பணியாற்ற சர்வதேச நாணய நிதியம் சாதகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதியமைச்சர் அலி சப்ரி, வோஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதிய தலைமையகத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை சந்தித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவிருந்த குறித்த கலந்துரையாடலுக்காக நிதியமைச்சர் அலிசப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் வோஷிங்டன் நோக்கி பயணிமாகி இருந்தனர்.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் நேற்றையதினம் ஆரம்பமானது.
ஒரு நிலையான தீர்வை அடைவதில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற சர்வதேச நாணய நிதியம் சாதகமாக உள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிலைமையைத் தணிக்க நிதியமைச்சர் ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியத்தினர் பாராட்டியதாகவம் அறியமுடிகிறது.
இதேவேளை, இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி பற்றிய கலந்துரையாடல்கள் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|