இலங்கையில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி!

Thursday, April 19th, 2018

இந்த ஆண்டில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு உற்பத்தியை எதிர்பார்ப்பதாக இலங்கை உப்பு கம்பனியின் தலைவர் ஐயுப்கான் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வருடாந்த உப்பு தேவை ஒரு லட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன்களாகும். இதில் 70 ஆயிரம் மெற்றிக் தொன்களை இந்தக் கம்பனியும், 20 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பை தனியார்நிறுவனம் ஒன்றும் உற்பத்தி செய்கின்றது.

எதிர்காலத்தில் உப்பு இறக்குமதியை நிறுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: