இலங்கையில் 8 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு மனநோய் – மருத்துவ நிபுணர் நீல் பெர்னாண்டோ!

Saturday, April 1st, 2017

நாட்டில் சுமார் 8 இலட்சத்துக்கும் அதிகமானோர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கொத்தலாவல பாதுகாப்புச் சேவைப் பல்கலல்கழகத்தின் மூத்த விரிவுரையாளரும் மனநோய் தொடர்பான சிறப்பு மருத்துவ நிபுணருமான மருத்துவர் நீல் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார்.

மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள அதிகமானோர் சிகிச்சைகள் எதுவுமின்றி வாழ்ந்து வருகின்றனர். எம்மால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. மன அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த மனநோய், இருதய அடைப்பு, புற்றுநோய், உறுப்புகளின் செயலிழப்பு என்பவற்றுக்கு காரணமாகவும் அமைகின்றன.

அத்துடன், இது தற்கொலை செய்து கொள்வதற்கும் தூண்டுதலாக அமையும். 2020ஆம் ஆண்டாகும் போது இந்த மனநோய் மேற்படி பெரும் நோய்களுக்கு ஆளாவதற்கு பிரதானமாக காரணமாக விளங்கும் என்றார்

Related posts: