இலங்கையில் 63 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட நபர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

Wednesday, November 4th, 2020

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் 63 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக குருநாகல் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 452 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.ஆர்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல மேல் மாகாணத்தில் 11 ஆயிரத்து 900 இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: