இலங்கையில் 6 நாட்களில் 54 பேர் கோவிட் தொற்றால் வீடுகளில் மரணம் – பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தகவல்!

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோவிட் மரணங்களில் வீடுகளில் ஏற்பட்டும் மரணங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த 20ஆம் திகதி முதல் தற்போது வரையில் பதிவாகிய 221 மரணங்களில் 54 பேர் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர். அதில் 22 மரணங்கள் நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று உறுதி செய்யப்பட்டவை என தெரியவந்துள்ளது.
மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட்டால் எதிர்வரும் வாரத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவிக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதன் பின்னர் கட்சியில் 10 பேர் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
Related posts:
சீரற்ற காலநிலை - ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை அழிவு!
யாழில் விபத்து - இளைஞன் உயிரிழப்பு!
மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது!
|
|