இலங்கையில் 5 நாட்களில் 120 க்கும் அதிகமான கொவிட் மரணங்கள் – சுகாதார தரப்பினர் கடும் எச்சரிக்கை!

இலங்கையில் கடந்த 5 நாள்களில் நூற்றுக்கும் அதிகமான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 9 ஆம் திகதி நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 800 ஐ கடந்து 801 ஆக பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், கடந்த 5 நாட்களில் 120 கொரோனா மரணங்கள் பதிவாகியதுடன், மரணங்களின் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது.
அதன்படி10 ஆம் திகதி 26 மரணங்களும், 11ஆம் திகதி 23 மரணங்களும், 12ஆம் திகதி 18 மரணங்களும், 13ஆம் திகதி 24 மரணங்களும், நேற்றைய நாளில் 31 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 923 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, இலங்கையின் கொரோனா மரணங்களின் சதவீதமானது, 0.67 ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச கொரோனா மரணங்களின் சதவீதம் 2.07 ஆக பதிவாகியுள்ளது. உலகளவில் பிரேஸிலில் கொவிட் மரணங்களின் சதவீதம் 2.79 விதமாக பதிவாகியுள்ளது.
பிரான்ஸில் 1.84 சதவீதமாகவும், அமெரிக்காவில் 1.78 சதவீதமாகவும், இந்தியாவில் 1.09 சதவீதமாகவும் கொவிட்-19 மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் கொவிட்-19 தரவுதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|