இலங்கையில் 4 இலட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா – 10 ஆயிரத்து 504 பேர் உயிரிழப்பு!
Wednesday, September 8th, 2021இலங்கையில் மேலும் 184 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 30 வயதுக்கு குறைவான 4 பேரும் 60 வயதுக்கு குறைவான 46 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 134 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 504 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 71 ஆயிரத்து 863 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து 964 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் 3 இலட்சத்து 88 ஆயிரத்து 278 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 73 ஆயிரத்து 81 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|