இலங்கையில் 2 இலட்சம் வெளிநாட்டு பணியாளர்கள்!

Monday, May 1st, 2017

நாட்டில் அதிகரித்த தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இலங்கையில் சுமார் 2 இலட்சம் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் தொழில் விஸா இல்லாமல் பணியாற்றுபவர்களும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், வெளிநாட்டு பணியாளர்களின் வருகை குறித்து ஆராய குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்றும் ஆலோசனை முன்வைத்துள்ளார். வெளிநாட்டு பணியாளர்களில், இந்திய, பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: