இலங்கையில் வருடமொன்றுக்கு 2000 தொழுநோயாளர்கள் உலக சுகாதார நிறுவனம் தகவல்!
Monday, January 30th, 2017
இலங்கையில் வருடமொன்றுக்கு 2000 புதிய தொழு நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர் என உல சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது
உலக சுகாதார நிறுவனத்தின் உலகத் தொழுநோயாளர் நிகழ்சித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 22 முன்னுரிமை நாடுகளில் இலங்கை, இந்திய, இந்தோனஷியா, மியன்மார், நேபாளம் என்பன அடங்குவதாகவும் தொழுநோயாளர்களில் 10சதவீதமானோர் சிறுவர்களாக உள்ளரேனவும் இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் தொடர்பாடல் உத்தியோகத்தர் கரென் றெய்டி தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு ரீதியாக 2லட்சத்து 12ஆயிரம் தொழுநோயாளர்கள் உள்ளனர். இதில் 8.9 சதவீதமானோர் சிறுவர்கள் மொத்த நோயாளர்களில் 6.7 சதவீதமானோர் பார்வை குறைதல், சதை கரைதல் மற்றும் நகங்கள் நீளுதல் எனும் கடும் நோய்க் குறிகளைக் காட்டுபவர்களாக உள்ளனர். என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் மருத்துவர் பூனம்சிங் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்ப்பாண மாவட்டத்தில் கருவாடு உற்பத்தி அதிகரிப்பு!
இலங்கையில் மேலும் 26 கொவிட் மரணங்கள்: 3 மாத குழந்தையும் பலி என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிப்பு!
அரச துறைக்கு 2024 ஆம் ஆண்டுமுதல் முறையான மதிப்பீட்டு நடைமுறை அறிமுகம் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான...
|
|