இலங்கையில் வரட்சிமற்றும் வெள்ளத்தால் உணவுப்பாதுகாப்புக்குஅச்சுறுத்தல்.

Saturday, June 24th, 2017

நாட்டில் ஏற்பட்டுள்ளவரட்சிமற்றும் வெள்ளம் காரணமாகஉணவுஉற்பத்தியில் பெரும் பாதிப்புஎற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகபாதிக்கப்பட்டபகுதிகளைச் சேர்ந்த 9 இலட்சம் மக்களின் உணவுப் பாதுகாப்புஅச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் ஐ.நா அறிக்கைஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்தநாட்களில் நாட்டில் ஏற்பட்டசீரற்றகாலநிலைகாரணமாகபெருமளவுவிவசாயச் செய்கைபாதிக்கப்பட்டுள்ளஅதேநேரம் வரட்சியாலும் கடுமையானபாதிப்புக்குள்ளாகியுள்ளது.
2016 மற்றும் 2017 முற்பகுதியில் வரட்சிகாரணமாகநாட்டில் அறுவடைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாகத்தான் அரிசிஉற்பத்திகடும் பாதிப்பைசந்தித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி உப உணவுப் பயிர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தன.
கடந்தமேமாதம் நாட்டில் ஏற்பட்டசீரற்றகாலநிலைகாரணமாகபெருமழைபெய்துபெருவெள்ளம் ஏற்பட்டபோதிலும் சிலமாகாணங்களிலுள்ளநீர் நிலைகளுக்குபோதியநீர் கிடைக்கப்பெறவில்லை.
இதன்காரணமாகஇரண்டு இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த9 இலட்சம் மக்களின் உணவுப் பர்துகாப்புஅச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.
எதிர்காலத்தில் இந்தநிலைநீடித்தால்; நிலைமைமேலும் மோசமடையும் என்றும் ஐ.நா எச்சரிக்கைவிடுத்துள்ளமைசுட்டிக்காட்டத்தக்கது.
இந்தவிடயத்தை ஐ.நா உணவுமற்றும் விவசாயநிறுவனம் மற்றும் ஐ.நா உணவுத்திட்டம் ஆகியன இணைந்துவெளியிட்டுள்ளஅறிக்கையிலேயேவெளியிடப்பட்டுள்ளது.

Related posts: