இலங்கையில் ரேஷன் என்ற பங்கீட்டு முறை அறிமுகப்படுத்த ஆலோசனை!

Sunday, June 12th, 2022

சாத்தியமான சமமான விநியோகத்தை செயல்படுத்த, எதிர்வரும் வாரங்களில் ரேஷன் என்ற பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்தலாமா என்பதை அரச அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மாத்தறை உட்பட்ட பல பகுதியில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே இந்த ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் இதற்கு முன்னர் இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையிடம் உணவு உதவியை நாடியதில்லை. எனினும் உணவுக்காக இலங்கை ஐக்கிய நாடுகளின் உதவியை நாடியுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் குழுவும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒரு கூட்டு மனிதாபிமான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் (HNP) திட்டத்தை ஆரம்பித்து, பொருளாதார நெருக்கடியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 1.7 மில்லியன் மக்களுக்கு உயிர்காக்கும் உதவியை வழங்க ஆரம்பித்துள்ளன.

நடப்பு ஜூன் முதல் செப்டம்பர் வரை.47.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை கோரியே இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: