இலங்கையில் மேலும் 24 பேர் கோவிட் தொற்றுக்கு பலி!

Friday, May 14th, 2021

கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, இலங்கையில் கோவிட் -19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 892 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் 2 ஆயிரத்து 249 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 796 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 802 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 26, ஆயிரத்து 126 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: