இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Tuesday, April 21st, 2020

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 309 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இதுவரை 98 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தையில் சுமார் 242 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1010 பேர் இராணுவ தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் குறித்த பகுதியில் பதிவாகி இருந்தமையே இந்த தனிமைப்படுத்தலுக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: