இலங்கையில் முதலீடு செய்ய ஐரோப்பிய முதலீட்டு வங்கி விருப்பம் !
Wednesday, March 29th, 2017உலகின் மிகவும் பெரிய முதலீட்டு வங்கியான ஐரோப்பிய முதலீட்டு வங்கி இலங்கையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
நிதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான துதுவர் டன் லாய் மார்க் இதனைக் கூறியுள்ளார். ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையை இலங்கைக்கு மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான விடயங்களை தற்போது நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தான் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான துதுவர் டன் லாய் மார்க் கூறியுள்ளார்.
2014ம் அண்டு முதல் 2020ம் ஆண்டு வரையான காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய முதலீட்டு வங்கியினூடாக 210 மில்லியன் யூரோ நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், புதிய முதலீட்டு வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
Related posts:
|
|