இலங்கையில் முதலாவது மரபணு இரசாயன கூடம்!

இலங்கையில் பாரிய அளவிலான முதலாவது மரபணு இரசாயன கூடம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் எதிர்காலத்தில் நாட்டில் சுகாதாரத் துறையில் பாரிய மாற்றம் ஏற்படுமென்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மரபணுத் தொழில்நுட்பம் தொடர்பில் உயர்கல்வியைத் தொடரும் வைத்தியர்கள் உள்நாடு – வெளிநாடுகளில் உள்ள விசேட வைத்தியர்களின் ஒத்துழைப்புடன் இந்த மரபணு இரசாயன கூடம் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சின், சுகாதார தகவல் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஐ.ஜாகொட இதுதொடர்பாக தகவல் தருகையில் அரச வைத்தியசாலைகளில் எலட்ரோனிக் வைத்திய அறிக்கையை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டத்தில் 80 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
நோயாளர்களின் மரபணு அறிக்கையும், மரபணு விடயமும் அறிக்கையில் உள்ளடக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மரபணு இரசாயன கூடத்தை நிர்மாணிக்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
Related posts:
|
|