இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சம் – சுகாதார அமைச்சர் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

Sunday, October 4th, 2020

திவுலபிட்டி பெண்ணுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் மூன்றிலும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் இன்று இந்த அறிக்கையை வெளியிட்டார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா சமுதாயத்தில் மீண்டும் உருவாகியுள்ளது. இந்த நோயைக் கட்டுப்படுத்த கடந்த காலத்தில் அளிக்கப்பட்ட ஆதரவை மீண்டும் தருமாறு கோரியுள்ளார்.

நாங்கள் கோரும் சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுங்கள். சமூக இடைவெளி, முகக்கவசம் மற்றும் கைகளை கழுவுதல் போன்ற சுகாதார நடைமுறைகளை மீண்டும் பின்பற்றுங்கள். இதுவரை ஒரு நோயாளி மட்டுமே இனங்காணப்பட்டுள்ளார்.

இசை நிகழ்ச்சிகளை நிறுத்துவதை கவனியுங்கள். நாங்கள் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளோம். இது சுகாதாரத் துறையால் கடுமையாக மறுபரிசீலனை செய்யப்படுகிறது. உங்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்லுங்கள்.

எங்களுக்கு கிடைத்த ஒரு மாதிரியில் தான் அவருக்கு கோவிட் தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. நாங்கள் மூன்று முறை பரிசோதித்த பின்னர்தான் அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

கொரோனாவை மீண்டும் அடக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். அதற்காக மக்களின் ஆதரவைக் கோருகிறேன்” என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை கறிப்பிடத்தக்கது.

Related posts: