இலங்கையில் மீண்டும் எரிபொருளின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

உலக சந்தையில் எரிபொருளின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக துறைசார் வல்லுனர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் சவூதி அரேபியாவில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி போன்ற காரணத்தினால் எரிபொருள் விலை அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வார இறுதியில் அமெரிக்க WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 71 அமெரிக்க டொலர் விலையை நெருங்கியுள்ளது.
உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் ப்ரென்ட் ரக கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 73.11 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பரீட்சை நிலையங்களில் ஏதேனும் சுகாதார குறைப்பாடுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள் - உயர்தர மாணவர்களு...
நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் பொலிஸ் துறையின் தற்போதைய பணிகள் குறித்தும் புதிய பொலிஸ்மா அதிபருட...
15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்க...
|
|