இலங்கையில் மீண்டுமொரு தாக்குதலை நடத்துவது இலகுவான காரியமல்ல – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன!

Friday, April 23rd, 2021

நாட்டில் மீண்டுமொரு தாக்குதலை நடத்துவதற்கு அடிப்படைவாதிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன நாட்டின் பாதுகாப்பு சிறந்த முறையில் பலப்படுத்தப்பட்டுள்ளமையினால் மீண்டுமொரு தாக்குதலை மேற்கொள்வது இலகுவான காரியமல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கமல் குணரத்ன மேலும் கூறுகையில் —

நாட்டின் “புலனாய்வு பிரிவு, தங்களது செயற்பாடுகளை சிறந்த முறையில் தற்போது முன்னெடுத்து வருகின்றது.

அதேபோன்று பொலிஸார், முப்படையினரும் நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் மிகவும் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அடிப்படைவாதிகள் மீண்டுமொரு தாக்குதலை நாட்டில் நடத்துவது இலகுவான விடயமல்ல. மேலும் திறமையான சில வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன  எனவும் அவர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: