இலங்கையில் மின்சார உற்பத்தி வீழ்ச்சி – இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்!

Sunday, June 21st, 2020

இலங்கை மின்சார உற்பத்தி 2020 ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 9 இலட்சத்து 67 ஆயிரத்து 43 ஜிகாவாட்டாக அதாவது  22.7% வீதத்திற்கு குறைந்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையினூடாக இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

இலங்கையின் மொத்த மின்சார உற்பத்தி குறிப்பாக பாரம்பரியமற்ற மின் உற்பத்தியான சூரிய, காற்று, மினி-ஹைட்ரோ மற்றும் பயோமாஸ் (Biomass) தவிர்த்து 2020 ஏப்ரல் மாதத்தில் 9 இலட்சத்து 67 ஆயிரத்து 43 ஜிகாவாட்டாக ஆக இருந்தது. இது 2020 ஜனவரி மாதத்தில் 12 இலட்சத்து 46 ஆயிரத்து 863 மெகாவாட்டிலிருந்து 22.7 சதவீதம் குறைந்துள்ளது என தரவுகள் குறிப்பிடுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச்சட்டம் தொழில்துறை, ஹோட்டல் மற்றும் உற்பத்தித் துறைகளின் நடவடிக்கைகளை தற்காலிகமாக குறிக்கப்பட்டதால் 2020 ஏப்ரலில் மின்சார உற்பத்தியைக் குறைப்பதற்கு காரணமாக இருக்கலாம்.  

அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் மின்சாரம் பொதுவாக சிங்கள – தமிழ் புத்தாண்டு காரணமாக சரிவைக் காட்டுகிறது.

ஜனவரி மாதத்தில் 12 இலட்சத்து 46 ஆயிரத்து 863 மெகாவாட் ஆகவும் பெப்ரவரியில் 12 இலட்சத்து 28 ஆயிரத்து 279 மெகாவாட் ஆகவும் மார்ச் மாதத்தில் 1,2 இலட்சத்து 6 ஆயிரத்து 069 மெகாவாட் ஆகவும் ஏப்ரல் மாதத்தில் 96 ஆயிரத்து 4ஆயிரத்து 43 மெகாவாட் ஆகவும் இலங்கையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

சுயாதீன மின் உற்பத்தியாளர்களால் இயக்கப்படும் அனல் மின் நிலையங்கள் அல்லது வெப்ப எண்ணெயிலிருந்து தனியார் துறையால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், 2020 ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மொத்த மின்சார உற்பத்தியில் இருந்து 25 சதவீதமாக இருந்தது, அதே காலப்பகுதியில் இலங்கை மின்சார சபையால் இயக்கப்படும் எண்ணெய் மின் உற்பத்தி நிலையங்கள் 13 சதவீதத்தை உற்பத்தி செய்தன என தரவு காட்டுகிறது.

இதேவேளை, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சிறிய அளவில் மின்சார சபையால் இயக்கப்படும் மின் உற்பத்தி நிலையங்களான மொறகாகந்த, இங்கினியாகல, உடவளவ, மற்றும் நிலம்பே தவிர்த்து இந்த தரவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

2020 ஜனவரி-ஏப்ரல் மாதங்களில் அதிகபட்ச இரவு நேர உச்ச தேவை 2020 மார்ச் 11 தினத்தில் 2 இலட்சத்து 71 ஆயிரத்து 750 மெகாவாட் ஆக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: