இலங்கையில் மிக வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – பலியாவோர் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிப்பு!

Friday, December 11th, 2020

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டில் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலையில் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணுக்கை 27 ஆயிரத்தை அண்மித்துள்ளது.

அத்துடன் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 538 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

அவர்களில் பேலியகொடை தொத்தணியுடன் தொடர்புடைய 448 பேரும், சிறைச்சாலை கொத்தணியில் 21 பேரும், அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, மினுவாங்கொடை, பேலியகொடை, சிறைச்சாலை கொத்தணிகளில் கண்டறியப்பட்ட கொவிட்19 நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 985 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் , வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 69 பேருக்கும் நேற்று கொவிட்19 தொற்றுறுதியானது..

மேலும் நான்கு கடலோடிகளுக்கும் நேற்றைய தினம் கோவிட் 19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 613 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் 8 ஆயிரத்து 206 கொவிட் 19 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:


காணி பதிவில் மோசடிகளை கட்டுப்படுத்த இலத்திரனியல் முறைமையை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை !
கொரோனா கட்டுப்படுத்தலுக்கு யாழ் மக்களின் ஒத்துழைப்பு போதாதுள்ளது - யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளப...
வரும் மாதம் சேதன பசளை பயன்படுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்படும் - விவசாயத்துறை அமைச்சு அறிவிப்பு!