இலங்கையில் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார் பிரதமர் தினேஷ் குணவர்தன !

Saturday, May 20th, 2023

இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாக் கண்காட்சி, பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்காக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தத் துறையில் நுழைய விரும்பும் எவருக்கும் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான சந்தை வாய்ப்புகளைக் கண்டறிய இந்தக் கண்காட்சி உதவும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதனூடாக சர்வதேச சுற்றுலா பயணிகளையும் கவர முடியும் என சுற்றுலாத்துறையினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:

குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றங்கள் : மக்கள் 6 மணியுடம் வீடுகளுக்குள் முடங்கும் நிலை -  அரச அதி...
குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள் நியமனம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
இலங்கைக்கு உதவுவதில் சாதகமான பங்காற்றுவதற்கு ஆற்றுவதற்கு, உலக நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் த...