இலங்கையில் மாலைத்தீவின் அனைத்துக் கட்சி பேச்சுவார்த்தை !

Thursday, December 21st, 2017

மாலைத்தீவில் நிலவும் அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அனைத்துக் கட்சி பேச்சுவார்த்தை இலங்கையில் நடைபெறவுள்ளது.

மலைத்தீவின் ‘ராஜே எம்வீ’ என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது.அங்கு நிலவும் அரசியல் பிரச்சினைக்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் ஊடாகவே தீர்வு காண முடியும்.

இதன்படி அவ்வாறான பேச்சுவார்த்தை ஒன்றை இலங்கையில் நடத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது என்று, அந்த நாட்டின் ராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் இந்த பேச்சுவார்த்தை 2018ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts: