இலங்கையில் மட்டுமல்ல உலகிலேயே இதுதான் நிலை – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டு!

பொருட்களுக்கான விலை அதிகரிப்பு இலங்கைக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உலகளாவிய ரீதியில் பொருட்களின் விலைகள் இன்று 40 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு விநியோகச் சங்கிலியில் சிக்கல்கள் இருப்பதாகவும், அவற்றை மீட்க இன்னும் ஒரு வருடம் ஆகும் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்நிய செலாவணி வருமானத்தை இலங்கை இழந்துள்ளதாகவும், இந்த வருடத்திற்குள் அது மீளும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை
இந்த ஆண்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க முடியாது என அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே உணவுப் பொருட்களின் பற்றாக்குறையினால் நாடு ஸ்தம்பிதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகளும் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது கோபமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
|
|