இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு!

Saturday, July 21st, 2018

இலங்கை மக்களின் ஆயுட்காலம் 79 வயதாக அதிகரித்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் பிறப்பு வீதம் குறைந்த மட்டத்தில் உள்ளதால் சிறார் சனத்தொகை வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது என இளைஞர்கள், வயோதிபர்கள் மற்றும் வலதுகுறைந்தோர் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பொருளாதார மற்றும் சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்து காணப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே இலங்கையின் ஆரம்ப சுகாதாரம் தொடர்பாக உலக வங்கி அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் அடுத்த 25 வருடங்களில் இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts: