இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுவது சாத்தியமில்லை – சுற்றாடல் அமைச்சு அறிவிப்பு!

Friday, September 24th, 2021

எதிர்காலத்தில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என சுற்றாடல்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட செயலமர்வின் போது விடயத்துடன் தொடர்புடைய பேராசியர்கள் மற்றும் கலாநிதிகள் இதனை தெரிவித்ததாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதுவரை பதிவான நிலஅதிர்வுகளில் 98% புவியியல் எல்லைப்பகுதிகளில் உணரப்பட்டுள்ளன. அதற்கு வெளியே 2% நில அதிர்வுகளே பதிவானதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள அவசியம் இல்லை எனவும் சுற்றாடல்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: