இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

Wednesday, April 28th, 2021


இலங்கையில் பரவும் கொரோனா வைரஸின் பிறழ்வு பிரித்தானியாவில் பரவிய புதிய வகை கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று புதனகிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநர் வைத்தியர் சந்திமா ஜீவந்தரா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கையில் தற்போது வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: