இலங்கையில் நேற்றையதினம் 221 பேருக்கு கொரோனா பரிசோதனை – எவருக்கும் தொற்று இல்லையென இராணுவ தளபதி அறிவிப்பு!

இலங்கையில் நேற்றையதினம் நடைபெற்ற மருத்துவ சோதனைகளில் ஒரு கொரோனா நோயாளியேனும் அடையாளம் காணப்படவில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் நடைபெற்ற மருத்துவ பரிசோதனைகளில் சமூகத்திற்குள்ளும், தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் இருந்து ஒருவரேனும் கொரோனா நோயுடன் அடையாளம் காணப்படாமை விசேட அம்சம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நேற்றையதினம் மட்டும் 221 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவர்களில் ஒருவரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படவில்லை என அவர் கூறியுள்ளார். அதற்கமைய சோதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வீட்டிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை 238 கொரோனா நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 68 பேர் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். 161 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|