இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துக்கள் – பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை !
Sunday, January 9th, 2022இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித சிரிதுங்க இதுகுறித்த எச்சரிக்கையினை வெளியிட்டுள்ளார்.
தற்போது சுமார் 35, ஆயிரம் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதுடன், நாளாந்தம் 35 பேர் விபத்துக்கள் காரணமாக உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டுதோறும், நாடளாவிய ரீதியிலுள்ள மருத்துவமனைகளில் ஆறுமுதல் ஏழு மில்லியன் பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதில் 1.3 மில்லியன் பேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என குறித்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.
தங்கள் கணக்கீடுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் மருத்துவமனைகளில், அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15 மில்லியனாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது ஐந்தில் ஒருவர் விபத்துக்களால் காயமடைய வாய்ப்புள்ளதாகவும் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித சிரிதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|