இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கு – இதுவரை 210 போர் உறுதிப்படுத்தப்பட்டனர்!

Monday, April 13th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 210 ஆக உயர்வடைந்துள்ளது.

ஒலுவில் கடற்படை தளத்தில் அடையாளம் காணப்பட்ட 5 கொரோனா தொற்றாளர்களும் இன்று புத்தளம் இரணவில கொரொனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஜா எல பகுதியில் கொரொனா தொற்றாளருடன் நெருக்கமாக பழகி, சுயதனிமைப்படுத்தலை கடைப்பிடிக்காத 28 பேர் அண்மையில் ஒலுவில் கடற்படை தள தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர். அதில் 5 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்கானது தெரிய வந்தது.

கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி இலங்கையில் முதலாவது கொரோனா நோய் தொற்றாளர் பதிவாகியிருந்தது. இலங்கையில் முதலாவதாக ஒரு சீனப் பெண் நோய்த்தொற்றுக்கு இலக்காகியிருந்தார். இதையடுத்து இலங்கையில் தொற்றாளர்கள் படிப்படியாக இனங்காணப்பட்ட நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா நோய் தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். நோய் தொற்றுக்கு இலக்காகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 55 என்பதுடன், 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 154 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற அடிப்படையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts: