இலங்கையில் தொடர்ந்தும் ஆயிரத்துக்கும் அதிகமானாருக்கு கொரோனா தொற்றுறுதி!

Sunday, July 18th, 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  ஆயிரத்து 452 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய ஆயிரத்து 447 பேர் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய 5 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 83 ஆயிரத்து 512 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், நாட்டில் கொவிட்19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 2 இலட்சத்து 55 ஆயிரத்து 833 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: