இலங்கையில் தீவிரமடைந்து வரும் சிறுநீரகப் பாதிப்பு!

காலி மாவட்டத்தில் அண்மைக் காலமாக சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இது தொடர்பாக பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்த மாகாண சபை உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி, சிறுநீரகப் பாதிப்புக்குள்ளானவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியிருந்தார்.
எனினும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இந்த மாத அமர்விலும் அது தொடர்பான விபரங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையிலும், சிறுநீரகப் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து காலி மாவட்டத்தை சிறுநீரக நோயாளிகள் அதிகம் கொண்ட மாவட்டமாக அறிவிப்பதுடன், நோயாளிகளுக்கான மத்திய அரசின் நிவாரண உதவித் திட்டங்களை பெற்றுக்கும் மயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Related posts:
|
|