இலங்கையில் தினமும் 500 முதல் 6௦௦ தொற்றாளர்கள் அடையாளம் – சுகாதார அமைச்சு !

Thursday, December 17th, 2020

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலவரப்படி மொத்தம் 500 முதல் 600 தொற்றாளர்கள் தினமும் கண்டறியப்படுகின்றஅதேநேரம் நாள்தோறும் 500 பேர் வரை குணமாகி வருவதாக இலங்கை சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சியின் தலைமையில் நடைபெற்ற கொரோனா கட்டுப்பாட்டுச் செயல்திறன் நடவடிக்கை மறு ஆய்வுக் குழுக் கூட்டத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய்த்தொற்றுக்கான கூடுதல் சிகிச்சை மையங்களை விரைவாக அமைப்பதில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, சுகாதார அமைச்சகத்தால் பெரும்பாலான நோயாளிகளுக்குச் சிகிச்சை மற்றும் வசதிகளை வழங்கக்கூடிய மருத்துவமனைகளைக் கையகப்படுத்தவும் அந்த மருத்துவமனைகளை விரைவில் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றவும் முடிவெடுக்கப்பட்டது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவரக்ளில் இன்றைதினம் மேலும் 701 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 26,353 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 160 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: