இலங்கையில் தானியக்க ரயில் ரிக்கெட் முறை அறிமுகமாகிறது!

Tuesday, February 5th, 2019

இந்த ஆண்டின் இறுதியில் இலங்கையில் தானியக்க ரயில் ரிக்கெட் முறை நடைமுறைப்படுத்த வேண்டும் என ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதியில் அதற்கான திட்டத்தை செயற்படுத்தத் தாம் திட்டமிட்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.

இலங்கை ரயில்வே திணைக்களம் இந்தத் திட்டத்திற்கான பல ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாகவும் இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கித் திட்டத்தின் கடன் வழங்குநர்களின் அங்கீகாரம் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தத் திட்டத்திற்கான நான்கு முன்மொழிவுகளை பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் அவற்றை மதிப்பீடு செய்து ஆசிய அபிவிருத்தி வங்கிக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பின்னர் அவர்கள் அதைச் சரிபார்த்து ஒப்புக்கொள்வார்கள் என்றும் கூறினார்.

இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர் இந்தத் திட்டம் எந்த செலவுகளும் இல்லாமல் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: