இலங்கையில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு!  

Saturday, November 25th, 2017

இலங்கையில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அவர்களின்   எண்ணிக்கை இலட்சத்திற்கு 34.6 வீதம் என உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்வதாகவும் இது 59 வீதம் எனவும் பெண்கள் தற்கொலை செய்து கொள்வது 13.3 வீதம் எனவும் அறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தற்கொலை செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இலங்கையும் இரண்டாவது இடத்தில் கயானாவும், மூன்றாவது இடத்தில் மங்கோலியாவும் காணப்படுகின்றது. இதற்குரிய காரணம் தாங்கி கொள்ளும் பலம் குறைவாக இருப்பதே என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related posts:

வானிலிருந்து வீழ்ந்த மர்மத் திரவத்தின் பாதிப்பால் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் 18 பேர் வைத்தியசால...
தாமதித்து சிகிச்சைக்கு வருவதினால், சில சமயங்களில் தொற்றாளர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் - யா...
இலங்கை நெருக்கடி மற்றும் உதவிகள் குறித்து இந்திய வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவுக்கு...