இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை!

Friday, November 11th, 2016

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படகுகளையும் மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இந்திய அமைச்சர் பொன் ராதாகிருஸ்ணன் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர சந்திப்பின்போதும் இது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாகவும் தனுஷ்கோடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் 115 படகுகளுடன் 9 மீனவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

boat

Related posts: