இலங்கையில் ஜப்பான் நிறுவனம் முதலீடு!

Wednesday, September 11th, 2019

ஜப்பானைச் சேர்ந்த Sugano Packing Materials .Co.Ltd என்ற நிறுவனம் இலங்கையில் முதலீட்டை மேற்கொள்வதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாக முதலீட்டு சபை தெரிவித்துள்ளது. தேயிலை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்ததும் தேயிலை எற்றுமதிக்கான பொதியிடும் பொருட்கள் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த நிறுவனம் ஜாஎல வில் இதற்கான திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இந்த நிறுவனம் பொருட்களை பொதியிட பயன்படுத்தப்படும் இயந்திரங்களை இறக்குமதி செய்து இந்த பொருட்களை தயாரிக்கவுள்ளது. இதற்காக இந்த நிறுவனம் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளது.

Related posts: