இலங்கையில் ஜனநாயம் மற்றும் மனித உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது – ஜேர்மன் தலைவர்!

Sunday, March 26th, 2017

இலங்கையில் ஜனநாயம் மற்றும் மனித உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளன.  இதன் மூலம் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் தான் மகிழ்ச்சியடைந்திருப்பதாக ஜேர்மன் பாராளுமன்ற தலைவர் பேராசிரியர் நோபெட் லெம்பேர்ட் (Norbert Lammert) தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதுவர் கருணாதிலக அமுனுகமவை சந்தித்த வேளையில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை இவர் தலைமையிலான ஜேர்மன் பாராளுமன்றக் குழு அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய விடுத்த அழைப்புக்கு அமைவாக இக்குழுவினரின் இலங்கை விஜயம் அமையவுள்ளது.  இலங்கையுடன்; ஜேர்மனி தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கும் இரண்டு நாடுகளின் பாராளுமன்ற அலுவல்களை மேம்படுத்துவதற்கும், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தலைவர் தெரிவித்துள்ளார்.

தனது விஜயத்தின்போது சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்த இவர் எதிர்பார்த்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன், பிரதமர் ரணில் விக்ரமசிங்;க, சிவில் அமைப்புக்களின் உறுப்பினர் ஆகியோரையும் இந்த விஜயத்தின்போது சந்திப்பதும் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts: