இலங்கையில் செல்போன் பாவனை அதிகரிப்பு!

Saturday, April 28th, 2018

நாட்டின் சனத்தொகையுடன் ஒப்பிடும் போது ஒன்றரை மடங்கு அளவில் செல்போன் பாவனை அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த புள்ளி விபரங்களின் அடிப்படையில் இலங்கையில் நூறுபேரை எடுத்துக் கொண்டால் அவர்களிடம் 143.6 செல்போன்கள் பயன்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் இலங்கை மத்திய வங்கியின் 2017ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் குறித்த புள்ளிவிபரங்களின் வாயிலாக 100 நபர்களில் 12.1 பேருக்கு நிலையான தொலைபேசி இணைப்புகளும், 27.5 பேருக்கு இணையவெளி இணைப்புகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.