இலங்கையில் செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை – அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, August 11th, 2021

தேவை ஏற்படின் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலகின் எந்த வைரஸ் மாறுபாட்டுக்கும் எதிரான சிறந்த வழி தடுப்பூசிகள் தான் எனவும் குறிப்பிட்ட அவர், இலங்கையில் செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் 95 – 96 வீதம் பாதுகாப்பானவையென்றும் குறிப்பிட்டுள்ளார்..

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், இதுவரை 30 வயதுக்கும் மேற்பட்ட 96 வீதமானவர்களுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசியும் 25 வீதமானவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: