இலங்கையில் சிறுவர் குற்றவாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, June 6th, 2023

கடந்த 8 வருடங்களில் சிறுவர் அதாவது இளம்பராய குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவருவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார்.

மேலும், 2015ஆம் ஆண்டு முதல், தற்போது வரை 212 சிறுவர் குற்றவாளிகள் தற்போது வரை சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் பயிற்சிகளை பெற்றுவரும் சிறுவர் குற்றவாளிகள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இக்கேள்விக்குப் பதிலளித்த போதே நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

2015ஆம் ஆண்டில் 43 பேரும், 2016ஆம் ஆண்டு 38 பேரும், 2017ஆம், 2018ஆம், 2019ஆம், 2020ஆம், 2021ஆம் மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் முறையே 33, 38, 36, 27, 19, 11 என்கிற எண்ணிக்கையில் சிறுவர் குற்றவாளிகள், சிறுவர் சீர்திருத்தப் பயிற்சி பள்ளிகளில் பயிற்சிகளை பெற்றுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின்படியே சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிகளில் சிறுவர் குற்றவாளிகள் அனுமதிக்கப்படுவார்கள். அதிகபட்சமாக 3 வருடங்கள் தண்டனையே இவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த பள்ளிகளில் பயிற்சிகள் வழங்கப்படாது. மாறாக மனோ வைத்தியமுறையைப் பின்பற்றி அவர்களின் மனநிலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சாதாரணத் தரப் பரீட்சைகளை இலக்காக் கொண்டு அவர்களுக்கு கற்றல் நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை இந்த சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிகளில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்தவர்களுக்கு நேரடியாகத் தொழில் வாய்ப்புகளை வழங்காவிட்டாலும், அதற்கான வழிகாட்டல்களை வழங்குவோம்.

சிறுவர் குற்றவாளிகள் தொடர்பான சட்டத்தை இக்காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: