இலங்கையில் சமூக பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த ஜனாதிபதியின் 25 வருட திட்டம்!
Thursday, January 12th, 2023அடுத்த 25 ஆண்டுகளில் நிறுவப்படும் பல புதிய நிறுவனங்கள், சட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்தார்.
மேலும், இலங்கையின் சமூக பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் நல்லிணக்கத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்வதே இதன் இலக்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி பிரேரணைக்கு திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான வீடுகள் மற்றும் இளைஞர்களுக்கான திட்டங்களும் அடங்கும்.
வரலாற்று, பொருளாதாரம் மற்றும் வர்த்தக நிறுவனம், பெண்கள் மற்றும் பாலின ஆய்வு நிறுவனம், அரச மற்றும் அரச கொள்கைகள் பல்கலைக்கழகம், விவசாய தொழில்நுட்ப, காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகங்கள் அடங்கும்.
மேலும், புதிய சட்டங்களில் தேசிய பெண்கள் ஆணைக்குழு, பாலின சமத்துவ சட்டம், பெண்கள் அதிகாரமளித்தல் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், காலநிலை மாற்றங்கள் மீதான சட்டம், சமூக சமத்துவ சட்டம், காடுகளை அழித்தல் மற்றும் வன பாதுகாப்பு சட்டம், நேரடி நிறுவனங்கள் சட்டம் என்பனவும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|