இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பு – நேற்றும் 82 பேர் மரணம்!

Thursday, August 5th, 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  கொவிட் தொற்றால் 82 பேர் மரணித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 727ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்று தோன்றிய இடமாகக் கூறப்படும் சீனாவில் இதுவரையில் கொவிட் தொற்றினால் 4 ஆயிரத்த 636 பேர்  உயிரிழந்துள்ளனர் என வேர்ல்டோமீற்றர் இணையதளம் குறிப்பிடுகிறது.

எனவே, நாட்டில் நேற்றுமுன்தினம் பதிவான 74 கொவிட் மரணங்களையடுத்து, மொத்த மரண எண்ணிக்கை 4 ஆயிரத்து 645 பதிவாகியது. அதற்கமையயே மொத்த கொவிட் மரண எண்ணிக்கையில் சீனாவை இலங்கை விஞ்சியுள்ளதை குறித்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: