இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு – வழிமுறைகளை இறுக்கமாக அனுசரிக்குமாறு பொதுமக்களிடம் அராணுவத் தளபதி வலியுறுத்து!
Thursday, June 10th, 2021இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 13 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 ஆயிரத்து 168 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 427 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளதாக என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 910 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநெரம் இதுவரையில் இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகூடிய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
இந்த அறிக்கையின் பிரகாரம், கடந்த மே மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் மே 31 ஆம் திகதி வரை 19 கொவிட் மரணங்களும், ஜூன் 01 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 08 ஆம் திகதி வரை 48 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.
அதேநேரம் இறுதியாக உறுதி செய்யப்பட்ட கொவிட் 19 மரணங்களில் 24 பெண்களும், 43 ஆண்களும் அடங்குகின்றனர்.
அத்துடன் 6 பேர் வீட்டிலும், 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதும், 56 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 29 வயதுக்குட்பட்ட 3 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|