இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து 4 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

Thursday, September 9th, 2021

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 18 ஆயிரத்து 147 பேர் குணமடைந்து இன்று வியாழக்கிழமை வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 8 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 74 ஆயிரத்து 780 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் கொரோனா வைரஸினால் 10 ஆயிரத்து 689 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: