இலங்கையில் கொரோனா தொற்றினால் 30ஆவது மரணம் பதிவானது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 30 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
நீரிழிவு நோயுடன், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இணையவழி மூலம் வியாபார முகாமைத்துவ கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!
மாணவர்களின் நலன் கருதி வட மாகாண ஆளுநரின் முக்கிய அறிவிப்பு!
யாழ். கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அகற்றுமாறு மக்கள் போராட்டம்!
|
|