இலங்கையில் கொரோனா தொற்றால் உயிர் பலியெடுக்கலாம் – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி !

இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
தென்னலங்கை ஊடகமொன்றுக்கு காலை அளித்த நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் –
கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்களாக இருந்தால் உயிரிழப்புக்கள் நேரிடுவது சாத்தியமாகாது.
ஆனாலும் வயோதிபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்களுக்கு தொற்று ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் உயிரிழப்புக்கள் பதிவாகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கந்தக்காடு மற்றும் வெளிசற கடற்படை முகாமில் தொற்று ஏற்பட்ட அநேகர் இளைஞர்கள் அல்லது வயோதிப வயதெல்லையை அண்மிக்கின்றவர்களாக இருந்த படியினால் தொற்று குணமடைந்தது.
அதன் காரணமாக உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை. எனினும் எதிர்காலத்தில் வயோதிபர்களுக்கு இந்த தொற்று தீவிரமாகப் பரவினால் உயிரிழப்புக்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றதாக சுகாதார அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|