இலங்கையில் கொரோனா தொற்று சமூகங்களுக்கு இடையில் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப்பினர் தரப்பினர் தெரிவிப்பு!

Monday, August 31st, 2020

இலங்கையில் கொரோனா தொற்று சமூகங்களுக்கு இடையில் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இத்தடன் இலங்கையில் கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், சமூகங்களுக்கு இடையில் கொரோனா தொற்று பரவாதமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியுள்ளது

குறிப்பாக இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3012 ஆக அதிகரித்துள்ளதுடன், அவர்களில் 2,860 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் வைத்தியசாலைகளில் தற்போது 140 பேர் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, 12 பேர் கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டு கண்காணிப்பு நிலையங்களிலுள்ள 1035 பேரும், சந்தேகத்திற்கிடமான நிலையில் கண்காணிப்பு நிலையங்களிலிருந்த 78 பேரும் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன், கடற்படையைச் சேர்ந்த 906 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் தற்போது பூரண குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் தற்போது சமூகங்களுக்கு இடையிலிருந்து கொரோனா வைரஸ் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

எனினும், வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரும் இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவர்களில் பெரும்பாலானோரே கொரோனா தொற்றினால் தற்போது அடையாளம் காணப்படுகின்றனர்.

இதனிடையே இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள பின்னணியிலேயே, கடந்த 5 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தெற்காசியாவில் தேர்தலொன்றை வெற்றிகரமாக நடத்திய நாடாக இலங்கை வரலாற்றில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: