இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1924 ஆக அதிகரிப்பு!

Thursday, June 18th, 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர் நேற்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1924 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக சென்னையில் இருந்து நாடு திரும்பிய 05 பேர் மற்றும் இலங்கை கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், 516 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, இன்று மட்டும் நோய் தொற்றிலிருந்து 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரையில் மொத்தமாக 1397 பேர் நோய் தொற்றிலிருந்து மொத்தமாக குணமடைந்துள்ளனர். இதேவேளை, 11 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: