இலங்கையில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு – குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கையும் 712 ஆக உயர்வு – சுகாதார அமைச்சு!

Tuesday, May 26th, 2020

இலங்கையில் நேற்றையதினம் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் இருவர் கடற்படையைச் சேர்ந்தவர் எனவும் ஏனையோர் குவைத்திலிருந்து நாட்டுக்கு வந்த நிலையில் மின்னேரியா தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 17 பேர் இன்றையதினம் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1182 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரை குறித்த நோய்த் தொற்றிலிருந்து 712 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் நேற்றையதினம் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காக மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: